உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

இந்திய செய்திகள் 5 மாதங்கள் முன்
43 பார்வைகள்

மயிலாடுதுறை அருகே ஓட்டுச்சாவடியில் பணியில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் காயமடைந்துள்ளார்.
இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பொலிஸ் நிலையத்தின் தலைமை காவலராக பணியாற்றிவரும் 33 வயதுடைய விக்னேஷ் என்பவர் இன்று 23 ஆம் திகதி தரங்கம்பாடி தாலுகா பொறையார் தனியார் பாடசாலையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் .

இதன்போது அங்கு வந்த நபர் தான் கையில் வைத்திருந்த கத்தியால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை சரமாரியாக குத்தி உள்ளார்.தாக்குதலால் விக்னேஷூக்கு கைகள் மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் விக்னேஷை மீட்டு சிகிச்சைக்காக பொறையார் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர்.தகவல் அறிந்து வந்த பொலிஸார் விக்னேஷை கத்தியால் குத்திய நபரை கைது செய்தனர்.

பின்னர் பொறையார் பொலிஸ் நிலையத்தில் வைத்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் காட்டுச்சேரி கிராமத்தை சேர்ந்த மாஜி ராணுவ வீரர் பிரபாகரன் என்பதும் அவர் மீது ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி ஊடகத்தின் போது பொலிசாரை கத்தியால் குத்திய வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

30 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0