உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ரயான்ஏயர் (Ryanair), விமான நிலைய செக்-இன் (Check-in) நேர நடைமுறையில் அதிரடி மாற்றம்!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
48 பார்வைகள்

பிரித்தானியாவின் பிரபல குறைந்த கட்டண விமான நிறுவனமான ரயான்ஏயர் (Ryanair), விமான நிலைய செக்-இன் (Check-in) நேர நடைமுறையில் அதிரடி மாற்றத்தை அறிவித்துள்ளது.

விமானப் பயணிகள் விமான நிலையப் பாதுகாப்பு சோதனைகள் மற்றும் பாஸ்போர்ட் வரிசைகளை எளிதாகக் கடப்பதற்கு ஏதுவாக, தனது செக்-இன் மற்றும் பொதி ஒப்படைப்பு (Bag drop) நேரத்தை 20 நிமிடங்கள் முன்கூட்டியே முடிக்க ரயான்ஏயர் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

தற்போதைய நடைமுறைப்படி, விமானம் புறப்படுவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்னதாக செக்-இன் கவுண்டர்கள் மூடப்படுகின்றன. ஆனால், புதிய மாற்றத்தின்படி: பயணிகள் விமானம் புறப்படுவதற்கு குறைந்தது 60 நிமிடங்களுக்கு (ஒரு மணிநேரம்) முன்னதாகவே செக்-இன் மற்றும் பொதி ஒப்படைப்புப் பணிகளை முடிக்க வேண்டும்.

இந்த புதிய விதிமுறை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய எல்லைக் கட்டுப்பாட்டு முறைமை (EES) காரணமாக, ஐரோப்பிய விமான நிலையங்களில் பயணிகளுக்குப் பல மணிநேர தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனைச் சமாளிக்கவே இந்த 20 நிமிட கூடுதல் கால அவகாசத்தை நிறுவனம் முன்கூட்டியே திட்டமிட்டுள்ளது.

ரயான்ஏயர் பயணிகளில் சுமார் 20% பேர் இந்த மாற்றத்தால் நேரடியாகப் பாதிக்கப்படுவர்.ஏனையோர் ஆன்லைன் மூலம் செக்-இன் செய்வதால் அவர்களுக்குப் பெரிய பாதிப்பு இருக்காது.சரியான நேரத்திற்கு செக்-இன் செய்யத் தவறும் பயணிகளுக்குப் பணத்தைத் திரும்பப் பெறாமலேயே விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்படலாம் (Denied boarding) என நிறுவனம் எச்சரித்துள்ளது.

கோடை கால விடுமுறைப் பயணிகளுக்கு இப்போதைக்கு இந்த மாற்றம் பொருந்தாது என்றாலும், நவம்பர் மாதத்திற்குப் பிறகு பயணம் செய்யத் திட்டமிடுவோர் இந்த ஒரு மணிநேரக் காலக்கெடுவை நினைவில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0