உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

டென்மார்க்கில் இரு ரயில்கள் நேருக்கு நோர் மோதி விபத்து!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
40 பார்வைகள்

டென்மார்க்கில் வியாழக்கிழமை 22 ஆம் திகதி இரண்டு உள்ளூர் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், குறைந்தது 17 பேர் காயமடைந்தனர்.அவர்களில் நான்கு பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அவசர சேவைத் துறை தெரிவித்துள்ளது.

விபத்தினைத் தொடர்ந்து இரண்டு ரயில்களில் இருந்த அனைத்துப் பயணிகளும் வெளியேற்றப்பட்டுவிட்டதாக டென்மார்க் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.இந்தச் சம்பவம் கோபன்ஹேகனுக்கு வடக்கே, ஹில்லரோட் மற்றும் காகெருப் நகரங்களை இணைக்கும் ஒரு ரயில் பாதையில் நிகழ்ந்துள்ளது.

தனது பாதுகாப்பு சாதனையில் பெருமை கொள்ளும் டென்மார்க்கில் 2019 ஆம் ஆண்டு நடந்த ஒரு ரயில் விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஒரு ரயில் கடக்கும் இடத்தில் விரைவு ரயில் ஒன்று விவசாய லொறி மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 27 பேர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0