உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்ந்த குழுவினர்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
83 பார்வைகள்

கடந்த 28 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட நிந்தவூர் கலாச்சார மண்டபத்தை தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் முழுமையாக நிர்மாணித்து மக்களிடம் கையளிக்கும் முயற்சியின் பலனாக, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இதன்படி, குறித்த கலாச்சார மண்டபத்தின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துவதற்காக, அம்பாறை மாவட்ட செயலாளர் அனுபம மங்கள விக்ரமாராச்சி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் முனாசிர், கணக்காளர் பாரிஸ், மாகாண கட்டிடங்கள் திணைக்களத்தின் கல்முனை பிராந்திய நிறைவேற்றுப் பொறியியலாளர் திருமதி. R.நிறோஜன் தலைமையிலான தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் குழு நேற்று புதன்கிழமை (22) நிந்தவூர் கலாச்சார மண்டபத்திற்கு நேரடியாக வருகை தந்திருந்தனர்.

இதன்போது, இந்த நிர்மாணப் பணிகளை விரைவாக நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், அதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் அரசாங்கத்தினுடைய முழுப்பங்களிப்பையும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் என்ற வகையில் தாம் இந்த நிந்தவூர் மக்களுக்கு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் அப்துல் லதீப், பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம், நிந்தவூர் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான சம்சுன் அலி, இப்திகார் மற்றும் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா ஆகியோரின் செயலாளர்கள், இணைப்பாளர்கள், பிரஜா சக்தியின் நிந்தவூர் தவிசாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

61 0 0
அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0