உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்து.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
55 பார்வைகள்

மட்டக்களப்பு நகருக்குள் இன்று அதிகாலை பாரவூர்தி ஒன்று கடைகளை உடைத்து பாரிய விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி மற்றும் நடத்துனர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.

கொழும்பிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டுவந்த பாரவூர்தி மட்டக்களப்பு திருமலை வீதியில் மட்டக்களப்பு நருக்குள் விபத்துக்குள்ளானது.

நித்திரை கலக்கம் காரணமாக குறித்த பாரவூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது கடைகளை உடைத்து குறித்த பாரவூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் இந்த விபத்து காரணமாக குறித்த பகுதிக்கான தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த விபத்தின்போது சாரதி சிறிய காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வேறு எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் தொலைத்தொடர்பு சேவையினை மீள செயற்படுத்துவதற்கான நடவடிக்கைளை தொலைத்தொடர்பு நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

60 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

69 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

76 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

58 0 0