உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

போர் நிறுத்த வாய்ப்புகள் நிச்சயமற்ற நிலையில் எண்ணெய் விலைகள் 4% உயர்வு!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
41 பார்வைகள்

போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்ட போதிலும், அமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க மாட்டோம் என்று ஈரான் உறுதியளித்ததைத் தொடர்ந்து வியாழக்கிழமை 23 ஆம் திகதி ஆரம்ப வர்த்தகத்தில் எண்ணெய் விலைகள் 4 சதவீதம் உயர்ந்தன.

GMT சுமார் 00.25 மணியளவில், அமெரிக்காவின் முக்கிய எண்ணெய் ஒப்பந்தமான மேற்கு டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 4.06 சதவீதம் உயர்ந்து, 96.73 டொலராக வர்த்தகமானது. சர்வதேச எண்ணெய் அளவுகோலான பிரென்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 3.62 சதவீதம் உயர்ந்து 105.63 டொலர்களாக வர்த்தகமானது.

அதைத் தொடர்ந்த நிமிடங்களில் இரண்டினதும் விலைகள் சரிந்தன. பெப்ரவரி 28 ஆம் திகதி அன்று இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.


போர் மீண்டும் தொடங்குமா என்ற நிச்சயமற்ற தன்மையால் அவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.பிராந்தியத்தை ஆட்கொண்டுள்ள போர் மீண்டும் தொடங்குவதற்கான காலக்கெடு நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மேலும் அவகாசம் அளிக்கும் வகையில், போர் நிறுத்தத்தை நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று கூறியிருந்தார்.

பாகிஸ்தானின் முயற்சிகளை வரவேற்பதாக ஈரான் கூறியது, ஆனால் ட்ரம்பின் அறிவிப்பு குறித்து வேறு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0