உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

செல்லப்பிராணிகளுடன் ஐரோப்பா செல்வோருக்குப் புதிய கட்டுப்பாடுகள்: ‘பெட் பாஸ்போர்ட்’ முறை இன்றுடன் ரத்து!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
38 பார்வைகள்

பிரித்தானியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குத் தமது செல்லப்பிராணிகளுடன் பயணம் செய்வோருக்கான புதிய கட்டுப்பாடுகள் இன்று ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அல்லது வேல்ஸ் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள், இன்று ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குப் பயணம் செய்யும்போது பழைய ‘செல்லப்பிராணி கடவுச்சீட்டுகளை’ பயன்படுத்த முடியாது எனப் பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதிமுறைகளின்படி, நாய், பூனை மற்றும் கீரி (Ferrets) போன்ற செல்லப்பிராணிகளுடன் பயணம் செய்வோர் இனி 4 மாதங்கள் வரையறை கொண்ட ஒவ்வொரு பயணத்தின் போதும் புதுப்பிக்கப்பட்ட விலங்கு சுகாதாரச் சான்றிதழ், ஒரு தனிப்பட்ட வாகனத்தில் அதிகபட்சமாக 5 செல்லப்பிராணிகளை மட்டுமே அழைத்துச் செல்லல் , உரிமையாளர் அல்லாமல் வேறு ஒருவருடன் செல்லப்பிராணி பயணம் செய்ய வேண்டுமானால், உரிமையாளரின் எழுத்துப்பூர்வமான அனுமதி கடிதம் என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

குறித்த விதிமுறைகள் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் ‘அசிஸ்டென்ஸ் டாக்ஸ்’ (Assistance dogs) வகை நாய்களுக்கும் இந்த புதிய விதிகள் பொருந்தும்.

இதேவேளை, “ஐரோப்பிய ஒன்றியத்தில் வழங்கப்பட்ட பெட் பாஸ்போர்ட்டாக இருந்தாலும், அதனை இன்று முதல் பயன்படுத்த முடியாது எனவும் மீறிப் பயன்படுத்தினால் செல்லப்பிராணி ஐரோப்பிய எல்லைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படலாம்” எனவும் அரசாங்கத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கு மட்டுமே இனி அங்குக் கடவுச்சீட்டுகள் வழங்கப்படும்.

அதேநேரம், பிரித்தானியாவிற்கு மீண்டும் திரும்பும் பயணிகளுக்கு பழைய கடவுச்சீட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0