உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ராஜஸ்தானில், பிரதமர் திறந்துவைக்கவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!

இந்திய செய்திகள் 5 மாதங்கள் முன்
49 பார்வைகள்

ராஜஸ்தானில், பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில், நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

ராஜஸ்தானில் பலோத்ரா மாவட்டத்தின் பச்சபத்ரா என்ற இடத்தில், நாட்டின் முதல் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் பசுமை வளாகம் அமைந்துள்ளது.

இறக்குமதியை குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இந்த சுத்திகரிப்பு நிலையம் முக்கிய பங்கு வகிக்கும்.

2013 செப்டம்பரில், முந்தைய காங்கிரஸ் அரசால் இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆட்சி மாற்றத்துக்கு பின், 2018 ஜனவரியில் இத்திட்டத்தை பிரதமர் மோடி மீண்டும் ஆரம்பித்து வைத்தார்.

திட்ட மதிப்பு, 43,129 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.

இந்த சுத்திகரிப்பு நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கவிருந்த நிலையில், அங்கு நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சுத்திகரிப்பு நிலையத்தின் கச்சா எண்ணய் காய்ச்சி வடித்தல் பிரிவில், தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை.

இது குறித்து வழக்குப் பதிந்து பொலிஸார் விசாரிக்கின்றனர்.

இதற்கிடையே, பிரதமர் மோடி துவக்கி வைக்கவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

30 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0