உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவு; நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
79 பார்வைகள்

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் அதற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் ஈஸ்டர் தாக்குதலுக்கான நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது.

மட்டக்களப்பு அரசடி கல்லடி பாலத்து அருகில் உள்ள ஈஸ்டர் படுகொலை ஞாபகார்த்த தூபியில் இன்று காலை மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புக்கள், மதத் தலைவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

குண்டு தாக்குதலில் உயிரிழந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது நினைவுத் தூபியில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் புஹாரி தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை உறுதிசெய், குற்றவாளியை பொறுப்புக் கூறுவதற்கு வழியேற்படுத்து, ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்புமிக்க வெளிப்படைத்தன்மையான விசாரணை வேண்டும் போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய தினம் ஈஸ்டர் தாக்குதலுக்குள்ளான நினைவஞ்சலி இடம்பெற்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

61 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

69 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

76 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

58 0 0