உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நினைவேந்தல் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
59 பார்வைகள்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவினையொட்டி மட்டக்களப்பில் பல்வேறு நிகழ்வுகள் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றன.

மட்டக்களப்பு நகரில் காந்திபூங்காவில் உள்ள ஈஸ்டர் படுகொலை ஞாபகார்த்த தூபியில் இன்று காலை மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதி முதல்வர் தி.டினேஸ் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது நினைவுத்தூபியில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாநகர சபையின் முதல்வர் மற்றும் முன்னாள் பிரதி முதல்வர் சத்தியசீலன் ஆகியோரினால் நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டன.

இதேபோன்று இன்றைய தினம் ஈஸ்டர் தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலயத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தினர் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததை காணமுடிந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

1 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

73 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

59 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

77 0 0