உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

முச்சக்கரவண்டியும் உந்துருளியும் மோதி விபத்து.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
45 பார்வைகள்

உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டியும் நாற்சந்தி ஒன்றில் மோதிக் கொண்டதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் இரண்டாம் குறுக்கு வீதியில் நேற்று திங்கட்கிழமை(20) இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றது.

இதன்போது குறித்த நாற்சந்தியில் உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டியில் பயணம் செய்தவர்கள் சந்தியில் கவனக்குறைவினால் விபத்திற்கு உள்ளாகியதை அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவின் காணொளியின் ஊடாக காண முடிந்தது.

அத்துடன் உள் வீதியில் மிக வேகமாக உந்துருளியை செலுத்தியவர் தலைக்கவசம் இன்றி பயணிப்பதுடன் அவருக்கு சாரதி அனுமதி பத்திரம் உள்ளதா?என முகநூலில் உள்ள நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். குறித்த சந்தியில் மோதிய இரு வாகனங்களும் நாற்சந்தி என்று பாராது கவனக்குறைவினால் தத்தமது வாகனங்களை செலுத்தியதை அவதானிக்க முடிந்தது.

மேலும் இவ்விபத்தில் காயமடைந்த இருவரும் அருகில் உள்ள நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டதாக விபத்தில் நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.

இவ்வாறான நாற்சந்தியில் விழிப்பூட்டல் சமிஞ்சைகள் இருந்தும் விபத்துக்கள் இடம்பெற்று வருவதால் வேகத்தடை முறைமையினை நான்கு திசைகளிலும் அமைக்குமாறு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

61 0 0
அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0