உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்புக்கு இங்கிலாந்து முனைப்பு!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
40 பார்வைகள்

பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் இணைந்து, ஹார்முஸ் நீரிணை பாதுகாப்புக்காக பல நாடுகளை ஒருங்கிணைக்கும் ஒரு பெரிய கடல்சார் பாதுகாப்பு திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. இந்த முயற்சியில் அமெரிக்கா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முக்கியமான பேச்சுவார்த்தை பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள எலிசே மாளிகையில் (Élysée Palace)இல் நடைபெற்றது. இதனை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்( Emmanuel Macron) மற்றும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) இணைந்து நடத்தினர்.

சுமார் 30 முதல் 40 நாடுகள் நேரடியாகவும், காணொளி வாயிலாகவும் இதில் பங்கேற்றன.. ஹார்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை மீண்டும் உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கம். இந்த நடவடிக்கை முழுமையாக பாதுகாப்பு நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே , ஐரோப்பிய தலைவர்கள், இந்த நீரிணை மூடப்பட்டிருப்பது உலக பொருளாதாரத்தில் பணவீக்கம், உணவு பற்றாக்குறை மற்றும் விமான சேவை தடைகள் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர்.

அத்துடன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer), “இந்த நீரிணையை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திறப்பது உலகளாவிய பொறுப்பு” என கூறியுள்ளார். மேலும், ஈரான் உலக பொருளாதாரத்தை பாதிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0