உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

யாழில் அபூர்வம்; ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்ற தாய்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
28 பார்வைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியைச் சேர்ந்த இளம் தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நேற்று (17) பதிவாகியுள்ளது.

செம்பியன்பற்று வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளம் குடும்பத்திற்கு, நேற்று நடைபெற்ற பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளது. ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகள் பிறந்த செய்தி அந்தப் பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிறந்த நான்கு குழந்தைகளில் இரு ஆண் குழந்தைகள், இரு பெண் குழந்தைகள் அடங்குவதாக மருத்துவத் தரப்புகள் உறுதிப்படுத்தியுள்ளது.

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் (Quadruplets) பிறப்பது மிகவும் அரிதான ஒரு நிகழ்வாகும். தற்போது தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாகத் தெரியவருகிறது.

இந்த அபூர்வ நிகழ்வையடுத்து, சமூக வலைதளங்களில் பலரும் அந்த இளம் தம்பதியினருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

23 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

72 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

65 0 0