உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

‘கிளீன் ஸ்ரீலங்கா’ 2026 செயல்திட்டங்கள் ஜனாதிபதியின் தலைமையில் மீளாய்வு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
32 பார்வைகள்

‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று ஏப்ரல் 17 ஆம் திகதி முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள், மக்களுக்கு மிகவும் நெருக்கமான வகையில் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இது வெறும் அரசாங்கத்தின் திட்டமாக மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், மக்களுக்கு மிகவும் நெருக்கமான செயற்திட்டங்கள் ஊடாக ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தை மேலும் பிரபலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

மேலும், கடந்த ஆண்டின் முன்னேற்றங்கள் இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன்இ எதிர்வரும் ஆண்டிற்கான இலக்குகளை அடைந்துகொள்வதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினரை எவ்வாறு ஒருங்கிணைத்துச் செயற்படுவது என்பது குறித்தும் அதிகாரிகள் இதன்போது தெளிவுபடுத்தினர்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, கிளீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் அழைப்பாளர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சு, மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர ஆகியோருடன் கிளீன் ஸ்ரீலங்கா செயலணியின் உறுப்பினர்கள், கிளீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

23 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

72 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

65 0 0