உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் – டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தகவல்!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிராந்தியத்தில் அமைதி திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய மற்றும் லெபனான் அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் வகையில், லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து லெபனான் மக்கள் வீதிகளில் இறங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் “மிக நெருக்கத்தில்” இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்த வார இறுதியில் மீண்டும் தொடங்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லெபனானில் ஏற்பட்டுள்ள போர்நிறுத்தச் செய்தியை ஈரானிய வெளியுறவு அமைச்சகம் வரவேற்றுள்ளது.

போர்நிறுத்தம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் அதிகாரி ஒருவர், “எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுடன்” இந்த போர்நிறுத்தத்தை அணுகப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போர்நிறுத்தம் அமலுக்கு வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக, தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய கடுமையான தாக்குதல்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

சைடன் (Sidon) மாவட்டத்தில் மூவரும், ஜஹ்ரானி (Zahrani) பகுதியில் எண்மரும் கொல்லப்பட்டதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நீண்டகாலமாக நீடித்து வரும் பதற்றத்தைத் தணிக்கச் சர்வதேச நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

95 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0