உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிரித்தானிய வெளியுறவுத்துறையின் உயர்மட்ட அதிகாரி பதவி நீக்கம்!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
61 பார்வைகள்

பிரித்தானிய வெளியுறவுத்துறையின் நிரந்தரச் செயலாளர் சர் ஓலி ராபின்ஸ் (Sir Olly Robbins) தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கான பிரித்தானியத் தூதராக லார்ட் மண்டல்சன் (Lord Mandelson) நியமிக்கப்பட்ட போது, அவர் பாதுகாப்புச் சோதனையில் (Security Vetting) தோல்வியடைந்த தகவலைப் பிரதமருக்கு அறிவிக்கத் தவறியமையே இதற்குக் காரணமாகும்.

கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்ட Lord Mandelson, ஜெப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்பு காரணமாகப் பின்னர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இருப்பினும், அவரது நியமனத்தின் போது முழுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டதாகப் பிரதமர் Sir Keir Starmer நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

தற்போது பாதுகாப்பு அமைப்புகளின் எச்சரிக்கையை மீறி இந்த நியமனம் வழங்கப்பட்டமை வெளிச்சத்திற்கு வந்துள்ளதால், பிரதமர் நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இந்த விவகாரத்தால் அதிருப்தியடைந்துள்ள பிரதமர், வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் இது குறித்த விளக்கத்தை அளிக்கவுள்ளார்.

அதேவேளை, இப்பிரச்சினை காரணமாகப் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

139 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0