உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

பிரித்தானியாவில் சடலம் இருக்கும் இடத்தை மறைக்கும் கொ*லையாளிக்கு பிணை !

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
41 பார்வைகள்

தனது மனைவியைக் கொ*லை செய்துவிட்டு, இன்றுவரை அவரது உடல் எங்கே இருக்கிறது என்ற உண்மையை மறைத்து வரும் கைதி ஒருவரை விடுவிக்க பிரித்தானிய பிணைச் சபை (Parole Board) தீர்மானித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிளின் ராசல் (Glyn Razzell) என்பவர், 2002 ஆம் ஆண்டு சுவிண்டன் (Swindon) பகுதியில் தனது மனைவியான லிண்டாவை (Linda) கொலை செய்த குற்றத்திற்காக 2003 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.

விவாகரத்து நடைமுறைகளின் போது ஏற்பட்ட மோதலே இந்தக் கொ*லைக்குக் காரணமாக அமைந்தது.

லிண்டாவின் உடல் இன்றுவரை கண்டெடுக்கப்படவில்லை என்றாலும், ராசல் பயன்படுத்திய காரில் இருந்த இரத்தக் கறைகளை ஆதாரமாகக் கொண்டு அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

இந்நிலையில் 16 ஆண்டுகள் குறைந்தபட்சத் தண்டனையை அனுபவித்து முடித்த ராசல், ஏற்கனவே மூன்று முறை பிணை கோரி விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டார்.
குறிப்பாக 2021 ஆம் ஆண்டு, ‘ஹெலன்ஸ் சட்டத்தின்’ (Helen’s Law) கீழ் பிணை மறுக்கப்பட்ட முதல் கைதியாக இவர் பதிவானார்.

இருப்பினும், இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற மேல்முறையீட்டு விசாரணையில், ராசல் இனி பொதுமக்களுக்கு ஆபத்தானவர் அல்ல என்று பிணைச் சபை தீர்மானித்துள்ளது.

அவர் கொ*லை செய்த “உடல் எங்கே இருக்கிறது என்று கூற மறுத்து வந்தாலும் அதற்காக அவரை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க முடியாது” எனச் சபை தனது முடிவில் தெரிவித்து அவரை பிணையில் விடுவிக்க பரிந்துரைத்துள்ளது.

பிணைச் சபையின் இந்த முடிவை எதிர்த்து மேன்முறையீடு செய்ய முடியுமா என்பது குறித்து பிரித்தானிய நீதியமைச்சின் அதிகாரிகள் தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருவதுடன் இந்த தீர்மானம் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

95 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0