உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை தொடர்பான பாகிஸ்தானின் அப்டேட்!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
42 பார்வைகள்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான திகதிகள் எதுவும் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு இன்று 16 ஆம் திகதி தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஏழு வாரங்களாகப் போரில் ஈடுபட்டுள்ள நாடுகள் விவாதித்து வரும் விடயங்களில் அணுசக்தி விவகாரங்களும் அடங்கும் என்று பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இஸ்லாமாபாத், கடந்த வார இறுதியில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான அமெரிக்க மற்றும் ஈரான் தரப்புப் பேச்சுவார்த்தையாளர்களை வரவேற்றது.

எனினும், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த கருத்து வேறுபாடுகள் காரணமாக, நீண்ட நேரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரும் அவர்களால் ஒரு அமைதி ஒப்பந்தத்தை எட்ட முடியவில்லை.

ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையிலும், இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கும், நீண்ட கால அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கும் நெருக்கமாக உள்ளனர் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

புதன்கிழமை அன்று, ஈரானுடனான மேலதிகப் பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத்தில் நடைபெற வாய்ப்புள்ளது என்று வெள்ளை மாளிகை கூறியது.

இருப்பினும், பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதா இல்லையா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு தற்சமயம் கூறியுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

95 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0