உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

கோட்டைக்கு அடியில் மறைந்துள்ள பிரித்தானியாவின் வரலாற்றையே மாற்றியமைக்கும் பிரம்மாண்ட குகை அடையாளம்!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
41 பார்வைகள்

பிரித்தானியாவின் பெம்ப்ரோக்ஷையர் (Pembrokeshire) பகுதியில் உள்ள 11-ஆம் நூற்றாண்டு கோட்டை ஒன்றின் கீழ் மறைந்துள்ள பிரம்மாண்ட குகை, மனித வரலாற்றின் ஆரம்ப காலத்தைப் பற்றிய புரிதலை முற்றாக மாற்றியமைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெம்ப்ரோக் கோட்டைக்கு அடியில் அமைந்துள்ள ‘வோகன் குகை’ (Wogan Cavern) எனப்படும் இந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட அகழ்வாராய்ச்சிகளில், 1,20,000 ஆண்டுகளுக்கு முன்பு வேல்ஸ் பகுதியில் சுற்றித் திரிந்த நீர்யானையின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது தவிர, மாமத் யானைகள் மற்றும் உரோமக் காண்டாமிருகங்களின் (Woolly Rhinoceros) நன்கு பாதுகாக்கப்பட்ட எலும்பு எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.

75 அடி நீளமும், 32 அடி உயரமும் கொண்ட இந்த குகை மிகவும் பிரம்மாண்டமானது.

விக்டோரியன் காலத்தில் தோண்டப்பட்டதாகக் கருதப்படும் இந்தக் குகைக்கு, கோட்டையிலிருந்து சுழல் ஏணி வழியாகச் செல்ல முடியும்.

2021 முதல் 2024 வரையிலான ஆய்வுகளில், 1,00,000 ஆண்டுகளுக்கும் மேலான மனித மற்றும் விலங்குகளின் நடமாட்டத்திற்கான ஆதாரங்கள் இங்கு புதைந்து கிடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் குறித்து அபெர்டீன் பல்கலைக்கழகத்தின் கலாநிதி ராப் டின்னிஸ் (Dr. Rob Dinnis) கூறுகையில்:
“இது போன்ற ஒரு தளம் பிரித்தானியாவிலேயே இல்லை. இது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய அரிய கண்டுபிடிப்பு. இங்கு ‘ஹோமோ சேபியன்ஸ்’ (Homo sapiens) மற்றும் அவர்களுக்கு முந்தைய ‘நியாண்டர்தால்கள்’ (Neanderthals) வாழ்ந்ததற்கான மிக அரிதான சான்றுகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன.” என தெரிவித்துள்ளார்.

இந்தக் குகையின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, அபெர்டீன் பல்கலைக்கழகம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பெரிய அளவிலான அகழ்வாராய்ச்சித் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.

இதன் மூலம்: 11,500 ஆண்டுகளுக்கு முந்தைய வேட்டைக்காரர்கள் பற்றிய தகவல்கள், 45,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரம்பகால மனிதர்களின் வாழ்வியல், பனி யுகத்திற்குப் பிந்தைய கால மாற்றங்கள்,
ஆகியவற்றை விரிவாகப் புரிந்துகொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

பிரித்தானியாவின் ஆரம்பகால மனித வரலாற்றைப் பதிவு செய்யும் மிக முக்கியமான ஆவணமாக ‘வோகன் குகை’ உருவெடுத்துள்ளமை சர்வதேசத் தொல்பொருள் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

95 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0