உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது விடப்படும்?

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
84 பார்வைகள்

இலங்கையில் நடைபெற்று முடிந்த யுத்தத்தின் சுவடுகளை காட்டி நிற்கின்ற பல்வேறு அரச கட்டடங்கள் இன்று வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பரந்து காணப்படுகின்றதை எவராலும் மறக்க முடியாது. அது போன்று தான் இன்று அபிவிருத்தி என்ற விடயம் ஆராயப்படும் போது இடம் இல்லை என்ற சொல் அதிகம் எம்மிடையே உச்சரிக்கப்படும் சொற்பிரயோகம் ஆகும். தற்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் கட்டட எச்சம் கூட இவ்வாறான நிலைமையினை கடந்த 25 வருடங்களாக முகம் கொடுத்து வருகின்றது.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் ஆயுள்வேத மத்திய மருந்தகம் மற்றும் சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவைக்கும் இடைப்பட்ட பகுதியில் கடந்த 2004 ஆண்டு சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் இதுவாகும். தற்போது இக்கட்டடத்தில் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதுடன் பாதுகாப்பற்ற இடமாகவும் காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தவிர குறித்த கட்டடத்தில் இரவு வேளையில் போதைப்பொருள் பாவனை இடம்பெற்று வருவதற்கான அடையாளம் தென்படுவதுடன் அருகில் பாடசாலை ஒன்றிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

எனவே குறித்த கட்டடம் அமைந்துள்ள பகுதியை சந்தையாக மாற்றி தந்துதவுமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் குறித்த இடத்தை உரிய தரப்பினர் துப்பரவு செய்து அப்பகுதியில் இடம்பெற்று வரும் சமூக சீர்கேடுகளை நிறுத்த முன்வர வேண்டும் என மக்கன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் குறித்த பகுதியில் விஷ ஜந்துக்களின் நடமாட்டத்தினால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

138 0 0
அம்பாறை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
அம்பாறை செய்திகள்

நிந்தவூரில் கடலில் நீராடச் சென்ற இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்ற இருவர் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில்இ ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை…

123 0 0
அம்பாறை செய்திகள்

நிந்தவூரில் ‘ஐஸ்’ போ@தைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

நிந்தவூர் கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 10 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (19) வியாழக்கிழமை அதிகாலை…

148 0 0