உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

உலகப் பொருளாதாரத்தை வியக்க வைத்த சீனா!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
88 பார்வைகள்

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% வளர்ச்சியடைந்துள்ளது. ஈரான் போரினால் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடிகளை முறியடித்து, சீனப் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இதற்கு முந்தைய காலாண்டில் சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி 4.5% ஆகக் காணப்பட்டது. பொருளாதார நிபுணர்கள் இந்த ஆண்டு வளர்ச்சி 4.7% ஆக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், அது 5% வரை உயர்ந்ததற்கு சீனாவின் வலுவான ஏற்றுமதி வர்த்தகமே முக்கிய காரணமாக அமைந்ததாக அந்நாட்டு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஈரான் – அமெரிக்கப் போரின் விளைவாக எரிபொருள், இரசாயனப் பொருட்கள் மற்றும் உலோகங்களின் விலைகள் அதிகரித்துள்ளன.

இந்த விலை உயர்வு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், உலகச் சந்தையின் சவால்களுக்கு மத்தியிலும் சீனப் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட சிறந்த வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

139 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0