உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வடகொரியா அதிரடி – அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் குரூஸ் ஏவுகணை

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
75 பார்வைகள்

வடகொரியா, தற்போது தனது கடற்படை பலத்தை உலகுக்கு பறைசாற்றும் வகையில் புதிய ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன் தலைமையில், அந்நாட்டின் அதிநவீன சோய் ஹியோன் எனும் போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டன.

ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஏவப்பட்டதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான ரோடோங் சின்முன் தெரிவித்துள்ளது.
அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்ட 2 அதிநவீன ‘குரூஸ்’ ஏவுகணைகளும், கப்பல்களைத் தாக்கி அழிக்கும் 3 ஏவுகணைகளும் ஏவப்பட்டன.
குரூஸ் ஏவுகணைகள் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக வானில் பறந்து மேற்கு கடல் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழித்ததாக வடகொரிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சோதனையை நேரில் பார்வையிட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், தனது கடற்படையின் அணு ஆயுதத் திறனை எல்லையற்ற வகையில் விரிவாக்கம் செய்யப்போவதாகத் தெரிவித்தார்.

5,000 டன் எடை கொண்ட ‘சோ ஹியோன்’ என்ற போர்க்கப்பலிலிருந்து சாம்பல் நிறப் புகையை வெளியிட்டபடி வளைந்து சென்ற எறிகணை ஒன்றை, கிம் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கப்பல் துறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த புகைப்படங்களை, கொரிய மத்திய செய்தி நிறுவனம் என்ற மற்றொரு அரசு ஊடகம் வெளியிட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

139 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0