உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

எம்பிக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பே இல்லை!- அண்ணாமலை விளக்கம்!

இந்திய செய்திகள் 5 மாதங்கள் முன்
45 பார்வைகள்

தொகுதி மறுவரையால் தமிழகத்தில் 39இல் இருந்து 59 ஆக எம்பிக்களின் எண்ணிக்கை உயரத்தான் போகிறது. குறைய வாய்ப்பே இல்லை. மக்கள் தொகை அடிப்படையில் என முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது; திமுகவை பொருத்தவரை பார்லிமென்டில் வெறும் பேச்சு மட்டும்தான் பேசினார்கள். ஆக்கபூர்வமாக பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு குறித்து எங்குமே பேசவில்லை. இன்றைக்கு முதல்வரிடம் கேட்கிறேன். இந்தியாவில் உத்தேச மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு கொண்டு வருகிறோம் என்றால் தமிழக எம்பிக்களின் எண்ணிக்கை 39 இல் இருந்து 31 ஆக வந்துவிடும். 8 குறைந்து விடும். அதேபோல் கேரளா 20ல் இருந்து 12க்கு வந்துவிடும்.

மத்திய அரசு மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ளவில்லை என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் பொய் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தால் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மத்திய அரசு அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை செய்து சட்ட வல்லுனர்களுடன் இணைந்து பேசி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டில்லியில் பிரதமர் மோடி பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு எப்படி கொண்டு வந்தோம் என பேசினார். 543 எம்பிகளின் எண்ணிக்கையை 50% உயர்த்தினோம் என்றால் 816 ஆக எம்பிகளின் எண்ணிக்கை உயரும். இது யாருக்கும் எதிரானது இல்லை. மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்திருந்தோம் என்றால் தமிழக எம்பிகளின் எண்ணிக்கை 39ல் இருந்து 31 ஆக குறைந்திருக்கும். ஆனால் எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறோம். எல்லா மாநிலங்களிலும் யாருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் 50 சதவீதமாக உயர்த்துகிறோம் என்பது முதற்கட்டமாக தெரிய வந்திருக்கிறது. பார்லிமென்டில் அதிகாரப்பூர்வமாக நமது தலைவர்கள் சொல்வார்கள்.

அப்படி இருக்கும்போது தமிழகத்தில் எம்பிகளின் எண்ணிக்கை 39 இல் இருந்து 59 ஆக போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கேரளாவில் எம்பிக்கள் இணைக்க இருபதில் இருந்து 30 வரை போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் செய்யாமல் எல்லோரையும் ஒரு நேர்கோட்டில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கும் போது எதற்காக பொய்யைப் பேசி மக்கள் மத்தியில் அச்சத்தை முதல்வர் ஸ்டாலின் உருவாக்குகிறார். 1960 ஐ தமிழகம் பார்க்கும் என்று சொல்கிறார்.

60-ல் திமுகவினர் யாரும் தீக்குளித்தார்களா? திமுகவின் குடும்பத்தில் யாரும் தீக்குளிக்கவில்லை அப்பாவி தொண்டர்களை தீக்குளிக்க வைத்து விட்டு வருஷத்திற்கு ஒரு முறை போய் மாலை போடுவதை கொள்கையாக திமுக ஏமாற்று வேலையாக செய்து கொண்டிருக்கிறது. உடனடியாக பிரதமர் மோடியை அச்சுறுத்தக்கூடிய விஷயத்தை முதல்வர் ஸ்டாலின் நிறுத்த வேண்டும். இது எல்லாம் முதல்வருக்கு தேவையில்லாத வேலை ஆக்கப்பூர்வமான ஆலோசனையை சொல்லுங்கள்.

அரசியல் கட்சிக்கு யோசனை சொல்வதற்கு தகுதி இருக்கிறது. பிரதமர் மோடியின் முயற்சி என்பது எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் நேரடியாக பெண்கள் அரசியலுக்கு வந்து சாதிக்க வேண்டும் என்பதுதான். அதற்கு தான் பார்லிமென்டில் சிறப்பு கூட்டத் தொடரை கூட்டி இருக்கிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

30 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0