உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

முன்னணி நிறுவனங்களின் கட்டண மோசடி அம்பலம்!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
75 பார்வைகள்

பிரிட்டனில் உள்ள இரண்டு முக்கிய ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்கள், AA மற்றும் BSM, “டிரிப் பிரைசிங்” (Drip Pricing) எனப்படும் தவறான கட்டண முறையை பயன்படுத்தியதற்காக தெரிவிக்கப்பட்டுள்ளது

Competition and Markets Authority (CMA) வெளியிட்ட தகவலின்படி, இந்த இரண்டு நிறுவனங்களும் சேர்த்து 80,000க்கும் மேற்பட்ட பயிற்சி பெறும் ஓட்டுநர்களுக்கு £760,000க்கும் அதிகமான தொகையை திருப்பிச் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளன. மேலும், நுகர்வோர் சட்டத்தை மீறியதற்காக AA நிறுவனத்திற்கு £4.2 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

CMA தெரிவித்ததாவது, ஆன்லைனில் ஓட்டுநர் பயிற்சி முன்பதிவு செய்யும் போது, பயனர்களுக்கு முழு கட்டண விவரம் ஆரம்பத்திலேயே காட்டப்படவில்லை. அதன் பதிலாக, கட்டாயமாக செலுத்த வேண்டிய £3 கட்டணம் பின்னர் சேர்க்கப்பட்டது. இது “டிரிப் பிரைசிங்” என்ற சட்டவிரோத நடைமுறையாக கருதப்படுகிறது.

இந்த நடவடிக்கை, CMA தனது புதிய அமலாக்க அதிகாரங்களை பயன்படுத்தி விதித்த முதல் பெரிய நிதி அபராதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம், நுகர்வோர் உரிமைகள் குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், நிறுவனங்கள் விலைகள் குறித்து முழுமையான வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

139 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0