உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு..!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
37 பார்வைகள்

ஹோர்மூஸ் நீரிணையை நெருங்கும் ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரிக்கும் நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தொடங்கிய தாக்குதல் சுமார் 6 வாரங்களாக நீடித்தது.

இந்த நிலையில் ஹோர்மூஸ் நீரிணையை நெருங்கும் ஈரானிய கப்பல்களை உடனடியாக தாக்கி அழிக்க அமெரிக்க இராணுவம் தயாராக உள்ளதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானின் கடற்படை பலம் குறைந்திருந்தாலும்இ அதிவேக சிறிய கப்பல்கள் இன்னும் உள்ளன. அவற்றை அழிக்க கடலில் போதைப்பொருள் கடத்தல் படகுகளை எதிர்கொள்ள பயன்படுத்திய நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் நிலவி வருகிறது. இதனால் சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

100 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

96 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

103 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

33 0 0