உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஒலிவ் எண்ணெய் விலை குறைந்தும், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் இல்லை

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
45 பார்வைகள்

பிரிட்டனில் ஒலிவ் எண்ணெய் விலை குறித்த விவகாரம் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்போ பெரியோ (Filippo Berio) நிறுவனத்தின் தலைவர் வால்டர் ஜான்ரே (Walter Zanre) சூப்பர் மார்க்கெட்டுகள் வாடிக்கையாளர்களை “ஏமாற்றுகின்றன” என்று கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

அவரின் கூற்றுப்படி, சமீப மாதங்களில் ஒலிவ் எண்ணெய் உற்பத்தி செலவு குறைந்திருந்தாலும், அந்த விலை குறைப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

பிலிப்போ பெரியோ Filippo Berio நிறுவனத்தின் 500 மில்லி எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஒலிவ் எண்ணெய் தற்போது சுமார் £7.50 ஆக குறைந்துள்ளது. இது 2025 ஆம் தொடக்கத்தில் £10.50 இருந்த நிலையில் குறைவு என்றாலும், 2022ஆம் ஆண்டில் இருந்த £3.75 விலையை விட இன்னும் அதிகமாகவே உள்ளது.

இருப்பினும் ,இத்தகைய குற்றச்சாட்டுகளை பிரிட்டிஷ் சில்லறை வர்த்தக கூட்டமைப்பு (British Retail Consortium (BRC) மறுத்துள்ளது. அதன் உணவு மற்றும் நிலைத்தன்மை இயக்குநர் ஆண்ட்ரூ ஓபி,(Andrew Opie,) “சில்லறை விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு விலை நன்மைகளை வழங்க முயற்சி செய்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார். மேலும், சந்தை போட்டி அதிகமுள்ளதால் வாடிக்கையாளர்கள் பல்வேறு பிராண்டுகளை ஒப்பிட்டு குறைந்த விலையை தேர்வு செய்ய முடியும் என்றும் கூறினார்.


இந்த விலை மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக Spain நாட்டில் ஏற்பட்ட மோசமான விளைச்சல் குறிப்பிடப்படுகிறது. 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் அந்நாட்டில் ஒலிவ் உற்பத்தி கடுமையாக குறைந்து, விலைகள் உயர்ந்தன. சர்வதேச ஆலிவ் கவுன்சில் (International Olive Council) தரவுகளின்படி, உற்பத்தி 1.5 மில்லியன் டன்னிலிருந்து 666,000 டன் வரை சரிந்தது.

ஆனால் தற்போது உற்பத்தி மீண்டும் உயரும் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு சுமார் 1.37 மில்லியன் டன் உற்பத்தி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் விலைகள் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

100 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

96 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

103 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

33 0 0