உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கரடி பொம்மையில் போதைப்பொருள் கடத்தல்; சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
79 பார்வைகள்

கொரியர் சேவை ஊடாக சூட்சுமமாக கரடி பொம்மையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை(8) மாலை அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர் அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.ஏ.எம்.பிரியங்கர தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன் கைதான சந்தேக நபர் அன்றைய தினம் சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது 120 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறும் ஏப்ரல் 13 ஆம் திகதி மீண்டும் மன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதற்கமைய ஏப்ரல் 13 ஆந் திகதி மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த சந்தேக நபரை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்த நீதிவான் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆந் திகதி வரை வழக்கினை ஒத்திவைத்தார்.

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்கவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்த சந்தேக நபர் கைதாகி இருந்தார்.

இதன் போது 43 வயது மதிக்கத்தக்க தோடம்பழம் சுயேட்சைக் குழுவின் காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பிராக செயற்பட்டவர் கைது செய்யப்பட்டிருந்ததுடன் குறித்த கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்டிருந்த விளையாட்டுப் பொருட்களுடன் இருந்த கரடி பொம்மையின் கழுத்துப் பகுதியில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த 107 கிராம் ஐஸ் போதைப்பொருளும் சந்தேக நபர் வசம் இருந்து மீட்கப்பட்டிருந்தது.

அத்துடன் இலத்திரனியல் தராசு, 2 கைத்தொலைபேசிகள், ஒரு தொகை பணம், கொரியர் ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் சந்தேக நபர் வசம் இருந்த மீட்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் குறித்த சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்திலில் அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்னவின் மேற்பார்வையில் அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.ஏ.எம்.பிரியங்கர தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

138 0 0
அம்பாறை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
அம்பாறை செய்திகள்

நிந்தவூரில் கடலில் நீராடச் சென்ற இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்ற இருவர் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில்இ ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை…

123 0 0
அம்பாறை செய்திகள்

நிந்தவூரில் ‘ஐஸ்’ போ@தைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

நிந்தவூர் கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 10 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (19) வியாழக்கிழமை அதிகாலை…

148 0 0