உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

கப்பல்களுக்கு ரெட் அலர்ட்! உச்சகட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க இராணுவத்தின் எச்சரிக்கை!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
61 பார்வைகள்

ஓமான் வளைகுடா மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் ஈரான் துறைமுகங்களை நோக்கிய கப்பல் போக்குவரத்தை முடக்கும் தனது திட்டத்தை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) கப்பல் மாலுமிகளுக்கு விடுத்துள்ள அறிவிப்பை சர்வதேச செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உரிய அனுமதியின்றி முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் நுழையும் அல்லது அங்கிருந்து வெளியேறும் எந்தவொரு நாட்டு கப்பலும் அமெரிக்கப் படைகளால் இடைமறிக்கப்படும் (Interception), பலவந்தமாகத் திசைதிருப்பப்படும் (Diversion) அல்லது முழுமையாகக் கைப்பற்றப்படும் (Capture) என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த முற்றுகையானது ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே உள்ள ஓமான் வளைகுடா மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும்.
ஈரானுக்குச் சம்பந்தமில்லாத பிற நாடுகளின் துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்களுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்க அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று இரவு 7:30 மணி முதல் இந்த முற்றுகை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ள நிலையில், அமெரிக்கப் போர்க்கப்பல்கள் அந்தப் பிராந்தியத்தில் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

ஈரானின் எதிர்வினை எவ்வாறு இருக்கும் என்பதைப் பொறுத்தே இந்தப் பதற்றம் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

100 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

96 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

103 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

33 0 0