உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தமிழக மகளிர் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மோதல்!

இந்திய செய்திகள் 5 மாதங்கள் முன்
61 பார்வைகள்

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால், மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஹசீனா சையது ராஜினாமா செய்ததையடுத்து, பொறுப்பு தலைவராக ராமலட்சுமி நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நடந்த தமிழக மகளிர் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மோதல் வெடித்தது.

சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா தலைமையில் மகளிர் அணியினரின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மகளிர் அணி மாவட்ட தலைவர்கள் மற்றும் அகில இந்திய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ‘தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பு தலைவராக ராமலட்சுமி நிமிக்கப்படுகிறார்; சட்டசபை தேர்தல் பணிகளை கவனிப்பார். அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்’ என அறிவிக்கப்பட்டது.
அதற்கு, மாவட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ‘எங்களை ஆலோசிக்காமல், தன்னிச்சையாக மாநில தலைவரை அறிவித்ததை ஏற்க முடியாது’ என கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதை தொடர்ந்து, ‘மாநில தலைவராக ராமலட்சுமி தான் செயல்படுவார். பின்,முறையாக மாநில தலைவர் அறிவிக்கப்படுவார்; அனைவரும் ஏற்க வேண்டும்; இல்லாவிட்டால் மாவட்ட தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என அல்கா லம்பா எச்சரித்தார். இதனால் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

இது குறித்து, மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தேர்தலில், மகளிர் காங்கிரசுக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு கேட்டு தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், 28 தொகுதிகளில் இரண்டு பெண்களுக்கு தான் வாய்ப்பு கிடைத்தது. மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் என பணியாற்றி, அகில இந்திய செயலர், மாநில தலைவர் பொறுப்பு வகித்த ஹசீனாவுக்கு ‘சீட்’ வழங்கவில்லை.

இதனால் அவர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து விட்டார். ஆனால், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி அவரை அல்கா லம்பா நீக்கியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹசீனா சையது ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

30 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0