உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

செம்மணி மனிதப் புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபாய்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
58 பார்வைகள்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை இரண்டு கட்டங்களாக அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 240 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 239 என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டிருந்தன. மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகள் சீரற்ற காலநிலை காரணமாகப் பிற்போடப்பட்ட நிலையில், இந்த மாதத்தின் இறுதியில் அல்லது எதிர்வரும் மாதத்தின் ஆரம்பத்தில் அந்தப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது.

எனினும், அகழ்வுப் பணிகளுக்கான நிதி ஒதுக்கப்படாததால், மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிக்கான திகதிகள் இதுவரை நிர்ணயம் செய்யப்படவில்லை. இவ்வாறான நிலையிலேயே, இந்தப் பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று மீள விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. நிதி விடுவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் அகழ்வுத் திகதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளன என்று கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

65 0 0
இலங்கை செய்திகள்

சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்; ஒருவர் கொ*லை.!

தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகொட பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (28) சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் 35 வயதுடைய நபர் ஒருவர் தடியால் அடித்துக் கொலை…

55 0 0
இலங்கை செய்திகள்

கனிம வள அகழ்வுக்கு புதிய நடைமுறை.!

மன்னார் மாவட்டத்தில் கருங்கல், கிரவல் மற்றும் மணல் உள்ளிட்ட கனிம வளங்களை அகழ்ந்தெடுப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபத்தின் அடிப்படையில் நடைமுறைகள் குறித்து விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட…

46 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

64 0 0