உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

“வாழும் போதே வாழ்த்துவோம்” என்னும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் சுகாதாரப் பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு ..!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
21 பார்வைகள்

“வாழும் போதே வாழ்த்துவோம்” என்னும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபையில் கடமையாற்றும் சுகாதாரப் பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.


மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்தில் தூய்மை மற்றும் மக்களின் ஆரோக்கியத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் இந்த விசேட விருது வழங்கும் நிகழ்வு இன்று மாலை போரதீவுப்பற்று பிரதேசசபையின் வெல்லாவெளி கலாசாரமண்டபத்தில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் வி.மதிமேனன்,பாடுமீன் லயன்ஸ் கழகத்தன் மாவட்ட ஆளுனர் கே.லோகேந்திரன், மாவட்ட ஆளுநர் இணைப்புப்பாளர் பி. சடாச்சரராஜா,லயன் வதூஷகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


“வாழும் போதே வாழ்த்துவோம்” எனும் மகுட வாசகத்துடன் முன்னெடுக்கப்படும் இந்த மனிதாபிமான நிகழ்வானது, மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகம் அனுசரணையுடன் போரதீவுப்பற்று பிரதேச சபை இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.


நமது நகரத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருப்பதில் முன்னின்று உழைக்கும் சுகாதாரப் பணியாளர்களின் சேவையை அங்கீகரிப்பதும், அவர்களைக் கௌரவிப்பதும் இந்த விழாவின் முக்கிய நோக்கமாகும்.


கடினமான சூழலிலும் அயராது உழைக்கும் முன்களப் பணியாளர்களுக்கு சமூகத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த உயரிய கௌரவம், அவர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதன்போது சுகாதார பணியாளர்களின் பிள்ளைகளுக்கு காற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு பாடுபமீன் லயன்ஸ் கழகத்தினை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் எஸ்.பகீரதன், உத்தியோகஸ்தர்கள்,ஊழியர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

2 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

50 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

61 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

53 0 0