உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

நீண்ட நாட்களாக பூட்டப்பட்டிருந்த வீடு ; பிரான்ஸில் தமிழர்களான தாயும் மகளும் சடலமாக மீட்பு..!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) பகுதியில் அமைந்துள்ள பான்டின் (Pantin) நகரில் தமிழர்களான தாயும் மகளும் உடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தவகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்வத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 50 வயதுடைய தாய் மற்றும் அவரது 20 வயதுடைய மகள் ஆகிய இருவருமே உடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அவர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து நீண்ட நாட்களாக எவரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, இருவரும் உடலங்களாகக் காணப்பட்டுள்ளனர். ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், இது உயிர்மாய்ப்பாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனினும், மரணத்திற்கான உத்தியோகபூர்வமான காரணத்தைக் கண்டறிய உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளிவரும் வரை காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஏதேனும் கடிதங்கள் அல்லது மேலதிக ஆதாரங்கள் கிடைத்துள்ளனவா என்பது குறித்த விபரங்களை காவல்துறையினர் இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை.
தனிப்பட்ட மன உளைச்சல் அல்லது பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

95 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0