உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஹோர்முஸ் நீரிணையில் முடங்கிய எண்ணெய் கப்பல்கள்! விலைகளில் மாற்றம் ஏற்படுமா..?

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

சுமார் 230 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் எரிபொருளுடன் பயணத்திற்குத் தயாராக உள்ள போதிலும், ‘ஹோர்முஸ் நீரிணை’ இன்னும் திறக்கப்படவில்லை அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சர்வதேச நாடுகளுக்கான எரிபொருள் தேவையினைப் பூர்த்தி செய்யும் வகையில், சுமார் 230 கப்பல்கள் எண்ணெய் ஏற்றப்பட்டு பயணத்திற்குத் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

கப்பல்கள் தயார் நிலையில் இருந்தாலும், பிரதான கடல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிப்பதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. “ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படவில்லை” என நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

உலகின் மொத்த எண்ணெய் நுகர்வில் பெரும் பகுதி இந்தப் பாதை ஊடாகவே கொண்டு செல்லப்படுகிறது. இந்தப் பாதையில் ஏற்படும் தடைகள் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே கப்பல்களின் பயணம் குறித்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

95 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0