உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்திய – பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்களிடையே சந்திப்பு!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் புது டெல்லியில் ஏப்ரல் 08 ஆம் திகதி நேற்றைய தினம் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலீலுர் ரஹ்மானை சந்தித்தார்.

இந்த சந்திப்பில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்ததோடு, பிராந்திய மற்றும் உலகளாவிய நிகழ்வுகள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் பங்களாதேஷ் பிரதமரின் வெளியுறவுத்துறை ஆலோசகர் ஹுமாயூன் கபீரும் உடனிருந்தார்.

பங்களாதேஷின் புதிய அரசாங்கத்துடன் ஆக்கப்பூர்வமாக செயற்படுவதற்கும், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்கும் இந்தியா விரும்புவதாக ஜெய்சங்கர் இதன்போது மீண்டும் வலியுறுத்தினார்.

மேலும், தற்போதுள்ள இருதரப்பு வழிமுறைகள் மூலம் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை ஆராய இரு தரப்பினரும் இதன்போது ஒப்புக்கொண்டனர்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ சந்திப்புகள் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர இரு நாட்டு வெளிவிகார அமைச்சர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் இதன்போது விவாதித்தனர்.

இந்தியப் பயணத்தின்போது பங்களாதேஷ் வெளிவிகார அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோரையும் சந்தித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

30 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0