உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

புதுவையில் மோதிக்கொண்ட காங்கிரஸ் – பாஜகவினர்

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
42 பார்வைகள்

புதுச்சேரி மண்ணாடிபட்டு தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள் நேருக்கு நேர் போட்டியிடும் நிலையில், திருக்கனூரில் உள்ள வாக்குச்சாவடியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

திருக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பாஜக தொண்டர்கள் அதிக அளவில் திரண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைக் கவனித்தகாங்கிரஸ் கட்சியினர், ‘வாக்காளர்கள் மட்டுமே இருக்க வேண்டும், மற்றவர்கள் அங்கு திரளக் கூடாது’ என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் திடீரென மோதலாக மாறி, இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸார் உடனடியாக தலையிட்டு, இரு தரப்பினரையும் தடியடி நடத்தி கலைத்தனர். தொடர்ந்து அங்கு கூடுதல் பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டதால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

30 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0