உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா? பாகிஸ்தான் மண்ணில் கைகோர்க்கும் அமெரிக்கா – ஈரான்!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

அமெரிக்கா – ஈரான் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நாளை வெள்ளிக்கிழமை ஏப்ரல் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “இரு நாடுகளின் தலைமைக்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்துப் பிணக்குகளையும் தீர்ப்பதற்கான ஒரு திட்டவட்டமான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஏதுவாக, 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரு நாட்டுப் பிரதிநிதிகளையும் இஸ்லாமாபாத்துக்கு வருமாறு அழைக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா, ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதையடுத்து, இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இரு நாட்டு அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதை ஈரான் ஜனாதிபதி பெசஷ்கியான் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் இரு தரப்பு மோதலை நிறுத்தி அமைதி நிலையைக் கொண்டுவர பாகிஸ்தான் எடுக்கின்ற முயற்சிகளை அவர் பாராட்டியதாகவும் ஷெபாஸ் ஷெரீப் மேலும் கூறியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக ஈரான் ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் பிரதமர் 45 நிமிடங்கள் உரையாடியதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

95 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0