உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் முயற்சியில் நால்வர் உயிரிழப்பு!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையேயான ஆங்கிலக் கால்வாயில் சிறிய படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் உயிரிழந்ததாக பிரெஞ்சு உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கலேஸ் நகருக்குத் தெற்கே, எக்விஹென் மற்றும் எகால்ட் கடற்கரைகளுக்கு இடையே உள்ள பூலோன் கடற்கரைக்கு அப்பால் நிகழ்ந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இன்று காலை முதல் மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்தினை அடுத்து சுமார் 30 பேர் அவசர மருத்துவ சேவையினரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில், ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியாவுக்கு நுழைபவர்களின் எண்ணிக்கை வியத்தகு வகையில் அதிகரித்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சுமார் 2,200 புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இடம்பெயர்வு கண்காணிப்பகத்தின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

95 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0