உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

80 ஆண்டு கால சாதனையை விஞ்சியுள்ள பிரித்தானியாவின் வெப்பநிலை!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
43 பார்வைகள்

பிரித்தானியா இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் வெப்பமான ஏப்ரல் நாட்களில் ஒன்றைப் பதிவு செய்துள்ளது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, தென்மேற்கு லண்டனில் உள்ள கியூ கார்டன்ஸில் (Kew Gardens) நேற்றை ஏப்ரல் 08 ஆம் திகதி தினம் வெப்பநிலை 26.6 செல்ஸியஸ் டிகிரியாக பதிவானது.

இதுவே, 2026 ஆம் ஆண்டின் இதுவரையில் ஒரு நாளில் பதிவான மிகவும் அதிகரித்த வெப்ப நிலை என தேசிய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

1946 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் பதிவான மிக வெப்பமான நாளாகவும் இது அமைந்தது.

வேல்ஸில் உள்ள ஆங்கிள்சி தீவில் இருக்கும் மோனா (Mona) என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை பதிவான 24.8 செல்ஸியஸ் டிகிரி என்ற வெப்பநிலையை புதன்கிழமை பதிவான வெப்பநிலை விஞ்சியது.

மேலும், இபிசா, ரோம் மற்றும் மராகேஷ் உள்ளிட்ட பிரபலமான சுற்றுலாத் தலங்களை விட புதன்கிழமை தலைநகர் லண்டனில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் தேசிய வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை தொடங்கிய இந்த கடும் வெப்பம், ஏப்ரல் மாதத் தொடக்கத்தின் சராசரியான 12 தொடக்கம் -15 செல்கியஸ் டிகிரியை விட மிகவும் அதிகமாக உள்ளது.

எனினும், வியாழக்கிழமையன்று தென்கிழக்குப் பகுதியிலிருந்து பிரித்தானியா முழுவதும் மழை மற்றும் குளிர்ச்சியான, சாரல் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

95 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0