உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

காலக்கெடு விதிப்பது தீர்வாகாது..! ஐ.நா முன்னாள் அதிகாரி கண்டனம்..!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தீர்வை எட்டுவதற்கு விதிக்கப்படும் காலக்கெடு உதவாது என ஐ.நா சபையின் முன்னாள் மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவிலிருந்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழலில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் “உச்சகட்ட மோதல் போக்கு” எந்தவித நன்மையும் பயக்காது என்று அவர் குறிப்பிட்டார்.

இரு நாட்டு அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி வருவது நிலைமையை மேலும் மோசமாக்குவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
ஒரு போரை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தும்போது, இரு தரப்பும் சில விட்டுக்கொடுப்புகளை செய்வது மிக அவசியம் என்று கிரிஃபித்ஸ் சுட்டிக்காட்டினார்.

“எதிரிகள் ஒரு உடன்பாட்டிற்கு வருவதற்குத் தேவையான போதிய cத்தையும் சூழலையும் வழங்க வேண்டும். அதுவே உலகளாவிய நன்மையைச் செய்யும்,” என்று அவர் கூறினார். குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் இத்தகைய அணுகுமுறை தேவைப்படுகிறது என்றும், ஆனால் தற்போது இரு தரப்பினரும் அத்தகைய முதிர்ச்சியான போக்கை வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

95 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0