உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

மத்திய கிழக்கின் பொற்காலம் – ஈரான் புனரமைப்பை தொடங்கலாம்! ட்ரம்பின் திடீர் மனமாற்றம்..!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
38 பார்வைகள்

உலக அமைதிக்கு ஒரு மகத்தான நாள், அது நடக்க வேண்டும் என ஈரான் விரும்புகிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சோஷியல் பதிவில், “உலக அமைதிக்கு ஒரு மகத்தான நாள், அது நடக்க வேண்டும் என ஈரான் விரும்புகிறது அவர்களுக்குப் போதும் என்றாகிவிட்டது.

அதுபோலவே, மற்ற அனைவருக்கும் அப்படித்தான்! ஹோர்முஸ் நீரிணையில், போக்குவரத்தை அதிகரிக்க அமெரிக்கா உதவும்.

நிறைய நேர்மறையான நடவடிக்கைகள் இருக்கும், பெரும் பணம் ஈட்டப்படும். ஈரான் புனரமைப்புப் பணிகளைத் தொடங்கலாம்.
நாங்கள் எல்லா விதமான பொருட்களையும் ஏற்றிக்கொண்டு, எல்லாம் நல்லபடியாக நடப்பதை உறுதி செய்வதற்காக அங்கேயே காத்திருப்போம். அது நடக்கும் என்று நான் நம்பிக்கையுடன் உணர்கிறேன்.
அமெரிக்காவில் நாம் அனுபவிப்பதைப் போலவே, இது மத்திய கிழக்கின் பொற்காலமாக இருக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதத்திலிருந்து இடம்பெற்று வந்த அமெரிக்க – ஈரானிய போர் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்கா கடுமையான எச்சரிக்கைகளையும் அச்சுறுத்தல்களையும் விடுத்து வந்தது.

இந்நிலையில், நேற்றைய தினம், ஈரான் தற்காலிக போர்நிறுத்தம் குறித்து அறிவித்த நிலையில், ட்ரம்ப், இந்த பதிவை இட்டுள்ளார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0