உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் உட்பட 10 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
57 பார்வைகள்

தமிழகத்தின் திருத்தணி தொகுதியில் அதிகாரப்பூர்வ அனுமதியின்றி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டதாக, தமிழக வெற்றி கழக (TVK) வேட்பாளர் சத்தியகுமார் உட்பட 10 நபர்கள் மீது திருத்தணி பொலிஸார் முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவு செய்துள்ளனர்.

ஏப்ரல் 23ஆம் திகதி அன்று ஒரே கட்டமாக நடத்துவதற்கும் மே 4 அன்று வாக்கு எண்ணிக்கையை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்த நடவடிக்கை வந்துள்ளது.

முன்னதாக, கடந்த திங்கட்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவருமான விஜய், சென்னையில் நடைபெறவிருந்த தனது தேர்தல் பிரச்சாரத்தை இரத்து செய்தார்.

கட்சி வட்டாரங்களின்படி, விஜய் வில்லிவாக்கம் மற்றும் டி நகர் தொகுதிகளில் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டிருந்தார்.

பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், இரு இடங்களுக்கும் இடையே சென்று வர காவல்துறை ஒதுக்கிய நேரம் போதுமானதாக இல்லை என்று கட்சி குற்றம் சாட்டியது.

இந்தக் கட்டுப்பாடுகளையும் நேர நெருக்கடிகளையும் காரணம் காட்டி, அன்றைய தனது பிரச்சாரத்தை இரத்து செய்ய விஜய் முடிவு செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்க தமிழக வெற்றிக் கழகமும் திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில் நிலவிய பெரும் அரசியல் களங்களுக்கான பிரச்சாரம் ஏப்ரல் 07 ஆம் திகதி நேற்றைய தினத்துடன் முடிவடைந்தது.

அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தொடர் வாக்குறுதிகளை அளித்து வாக்காளர்களைக் கவர முயன்றதோடு, தங்களது அரசியல் எதிரிகள் மீது கடுமையான தாக்குதல்களையும் தொடுத்தனர்.

அசாமில் 126 தொகுதிகளுக்கும், கேரளாவில் 140 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் நாளை ஏப்ரல் 08 ஆம் திகதி வியாழக்கிழமை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

30 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0