உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

கடத்தப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் விடுதலை!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
58 பார்வைகள்

ஈராக்கின் பக்தாத் நகரில் ஈரான் ஆதரவு பெற்ற ‘கதாயிப் ஹிஸ்புல்லா’ ஆயுதக்குழுவினால் கடத்தப்பட்டிருந்த அமெரிக்க ஊடகவியலாளர் ஷெல்லி கிட்டில்சன், ஈராக் அரசுடன் மேற்கொள்ளப்பட்ட கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஈராக் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த குறித்த ஆயுதக்குழுவின் உறுப்பினர்கள் சிலரை விடுவிப்பதற்குப் பதிலாக, ஷெல்லி கிட்டில்சனை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ளதாக அந்த அமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கக் கோரி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த காலக்கெடு முடிவடைய சில மணிநேரங்களே இருந்த நிலையில் இந்த விடுதலை இடம்பெற்றுள்ளது.இது ஒரு மனிதாபிமான அடிப்படையிலான நடவடிக்கை என்றும், அமெரிக்காவுடனான தங்களது போர் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் கதாயிப் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் கடத்தப்பட்ட ஷெல்லி கிட்டில்சன், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல அமெரிக்க ஊடகங்களுக்காகப் பணியாற்றி வரும் ஒரு சுயாதீன ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0