உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

“இன்று இரவு ஒரு முழு நாகரிகம் அழியும்”: ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு..!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,ஈரானுக்கு விதித்த கெடு நெருங்கி வரும் நிலையில், “இன்று இரவு ஒரு முழு நாகரிகமும் அழியும்” என்று கூறி, ஈரானுக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.

“இன்று இரவு ஒரு முழு நாகரிகமும் அழியும், அதை மீண்டும் ஒருபோதும் மீட்க முடியாது. அது நடக்க நான் விரும்பவில்லை, ஆனால் அது அநேகமாக நடக்கும்,” என்று ட்ரம்ப் ‘ட்ரூத் சமுக’ தளத்தில் பதிவிட்டுள்ளார் .

இருப்பினும், இப்போது ஒரு முழுமையான ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருப்பதாலும், அங்கு மாறுபட்ட அறிவுக்கூர்மை கொண்ட மற்றும் பயங்கரவாத ஆதரவு அற்ற சிந்தனைகள் மேலோங்கி நிற்பதாலும் ஒருவேளை புரட்சிகரமான அற்புதம் நிகழலாம்.உலகின் நீண்டமற்றும் சிக்கலான வரலாற்றின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றான இன்றிரவே அதற்கான விடையை நாம் அறிந்து கொள்வோம்.

47 ஆண்டுகால மிரட்டல் ஊழல் மற்றும் மரணங்கள் ஆகியன இன்று இரவோடு முடிவுக்கு வரும். ஈரானின் மகத்தான மக்களுக்கு இறைவன் அருள் புரிவார். இவ்வாறு ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்குள் (கிழக்கு நேரப்படி) ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால், ஈரான் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என்று கூறி, அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களையும் பிற பொது உள்கட்டமைப்புகளையும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் முன்னதாக அச்சுறுத்தியிருந்தார்.
ட்ரம்ப் இதற்கு முன்னர் பல காலக்கெடுக்களை நிர்ணயித்துள்ளார், ஆனால் அவை பின்னர் மாற்றப்பட்டுள்ளன. அத்தகைய உள்கட்டமைப்புகளைத் தாக்குவது ஒரு போர்க்குற்றமாக அமையக்கூடும் என்ற கவலைகளை ஜனாதிபதியும் வெள்ளை மாளிகையும் நிராகரித்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0