உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

மீண்டும் திறக்கப்பட்டது சவூதி – பஹ்ரைன் பாலம்!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

சவூதி அரேபியாவையும் பஹ்ரைன் தீவையும் இணைக்கும் கிங் ஃபஹ்ஹத் பாலம் ஈரானியத் தாக்குதல் அச்சுறுத்தலினால் சில மணிநேரங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், இன்றுகாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கிங் ஃபஹ்ஹத் பால அதிகாரசபை தனது எக்ஸ் தளத்தில், பஹ்ரைனை ஏனைய அரபு நாடுகளுடன் இணைக்கும் ஒரே தரைவழிப் பாதை மீண்டும் பொதுப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.முன்னதாக, ஈரானிடமிருந்து வரக்கூடிய ஏவுகணைத் தாக்குதல்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தப் பாலம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

இன்று அதிகாலை ஈரான், சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தை இலக்கு வைத்து 7 பாலோஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.

சவூதி வான் பாதுகாப்புப் படையினர் இந்த ஏவுகணைகளை இடைமறித்து அழித்த போதிலும், அவற்றின் சிதறல்கள் அல்-ஜுபைல் பகுதியிலுள்ள எரிசக்தி உட்கட்டமைப்புகளுக்கு அருகில் விழுந்துள்ளன. அங்குள்ள சில பெற்றோலிய வளாகங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், சேத விபரங்கள் தொடர்பில் ஆய்வுகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாலம் திறக்கப்பட்டாலும், பஹ்ரைனின் வான் போக்குவரத்து இன்னும் சீராகவில்லை. ஈரானியத் தாக்குதல் அச்சுறுத்தலனால் பஹ்ரைன் சர்வதேச விமான நிலையம் கடந்த சில வாரங்களாகவே மூடப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பாலமே பஹ்ரைன் மக்களுக்கான பிரதான போக்குவரத்து வழியாக மாறியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0