உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

இசை நிகழ்வு சர்ச்சையைத் தொடர்ந்து, பிரிட்டிஸ் யூத சமூகத்தை சந்திக்க விரும்புவதாக கான்யே வெஸ்ட் தெரிவிப்பு!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

லண்டன் இசை விழா ஒன்றின் முக்கியக் கலைஞர் என்ற தனது அந்தஸ்து குறித்து அதிகரித்து வரும் எதிர்ப்புகளுக்கு அமெரிக்க ராப் பாடகரான கான்யே வெஸ்ட் (Kanye West) முதன்முறையாக ஏப்ரல் 07 ஆம் திகதி இன்றைய தினம் பதிலளித்துள்ளார்.

அதில் அவர், லண்டன் பயணத்தின் போது என் இசையின் மூலமாக ஒற்றுமை, அமைதி மற்றும் அன்பைக் கொண்டுவந்து, ஓர் மாற்றத்தை நிகழ்த்துவதே தனது ஒரே குறிக்கோள் என்று அவர் கூறினார்.

மேலும், தனது கோடைக்கால லண்டன் பயணத்தில் பிரித்தானியாவில் உள்ள யூத சமூக உறுப்பினர்களை சந்திக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அண்மைய ஆண்டுகளில் கான்யே வெஸ்ட் யூத-விரோத கருத்துக்களைத் தெரிவித்ததை அடுத்து லண்டனில் நடைபெறும் வயர்லெஸ் திருவிழாவில் அவரது பங்கேற்பும், நாட்டுக்கான வருகையும் தடை செய்யப்பட வேண்டும் என இங்கிலாந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரித்து வரும் இந்த அறிக்கை வந்துள்ளது.

அதேநரேம், தற்போது யோ என்று அழைக்கப்படும் அமெரிக்க ராப் பாடகரை நாட்டிற்குள் அனுமதிப்பதாக இல்லையா என்பது குறித்து அமைச்சர்கள் பரிசீலித்து வருகின்றனர்.

இந்த ஜூலை மாதம் ஃபின்ஸ்பரி பூங்காவில் நடைபெறும் திருவிழாவின் மூன்று இரவுகளிலும் முக்கியக் கலைஞராகப் பங்கேற்க உள்ள இந்த ராப் பாடகர், தொடர்ச்சியான யூத-விரோதக் கருத்துக்களுக்காகவும், அடால்ஃப் ஹிட்லர் மீதான பகிரங்கமான அபிமானத்திற்காகவும் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

வயர்லெஸ் திருவிழாவில் கான்யே வெஸ்ட் முதன்மைக் கலைஞராக அறிவிக்கப்பட்ட பின்னர் பெப்சி (Pepsi) மற்றும் டயாஜியோ (Diageo) உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் நிகழ்விற்க்கான தங்களது நிதியுதவியை விலக்கிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0