உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஓய்கிறது தேர்தல் முழக்கம்! கேரளம், அசாம், புதுச்சேரியில் முடிகிறது பிரச்சாரம்..!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
40 பார்வைகள்

அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நாளை மறுநாள் ஏப்ரல் 09 ஆம் திகதி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் கேரளம், அசாம் மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இன்றுடன் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைகிறது.

தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் 3 மாநிலங்களிலும் உச்சக்கட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தேசிய கட்சிகளின் தலைவர்களும் இந்த மாநிலங்களில் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கேரளம்140 தொகுதிகளை கொண்ட கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி தொடர்ந்து 3-ஆவது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

அதேநேரம், ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி களம் காண்கிறது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதுவதால் மும்முனை போட்டி நிலவுகிறது.மாநிலம் முழுவதும் 92 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களின் வெற்றி, தோல்வியை 2.71 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர்.
அசாம் 126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் 3-ஆவது முறையாக ஆட்சிக்கு வர பா.ஜனதா முனைப்பு காட்டும் நிலையில், ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் களமிறங்கியது.

தேர்தல்களத்தில் மொத்தம் 722 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் 59 பேர் பெண்கள். மொத்த வாக்காளர்கள் 2.5 கோடி பேர் ஆவர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து தாவி சென்றவர்களால் தான் பா.ஜ.க. பெரிய அளவில் வெற்றி பெற்று வருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வரும் சூழலில், இந்த முறை ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் நோக்கில் காங்கிரஸ் களமிறங்கி உள்ளது. இதனால், அசாமில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இரு அரசியல் கட்சிகள் சார்பிலும் கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரம் அங்கு தீவிரமடைந்துள்ளது. புதுச்சேரி30 தொகுதிகளில் கொண்ட புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் இந்த தேர்தலை சந்திக்கிறது.

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ்-தி.மு.க., கூட்டணி. இந்த முறை அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் வியூகம் அமைத்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது. புதிதாக நடிகர் விஜய் தொடங்கிய த.வெ.க., சீமானின் நாம் தமிழர் கட்சிகளும் களமிறங்கி உள்ளதால் பலமுனை போட்டி நிலவுகிறது.

இங்கு மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்த வாக்காளர்கள் 9.48 லட்சம் பேர் ஆவர்.நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள், மே 4ஆம் திகதி எண்ணப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

30 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0