உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்திய வெளிவிவகாரத்துறை செயலாளர் நாளை அமெரிக்கா பயணம்!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
37 பார்வைகள்

வெளிவிகாரத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்தியா – அமெரிக்கா உறவுகளின் முன்னேற்றத்துக்காக மூன்று நாள் பயணமாக நாளை வொஷிங்டன் டி.சி.க்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

திட்டமிடப்பட்டுள்ள ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 ஆம் திகதி வரையிலான அவரது அமெரிக்கப் பயணம் முக்கியத் துறைகளில் நடைபெற்று வரும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்துச் செல்ல ஒரு வாய்ப்பை வழங்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வர்த்தகம், பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அத்துடன் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து வெளிவிகாரச் செயலாளர், அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளுடன் இந்த பயணத்தின் போது கலந்துரையாடுவார் என்றும் அந்த அறிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தப் பயணம், கடந்த பெப்ரவரியில் வெளிவிகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வொஷிங்டன் டி.சி.க்கு மேற்கொண்ட பயணத்தைத் தொடர்ந்து நடைபெறுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

30 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0