உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

மத்திய கிழக்கு போர் பதற்றம்: உலகளாவிய வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும் என IMF கணிப்பு!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
39 பார்வைகள்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதோடு, பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் சர்வதேச நிதி நிறுவனத்தினால் வெளியிடப்படவுள்ள உலகப் பொருளாதாரக் கணிப்பிற்கு முன்னதாக அவர் இந்தத் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு செல்லும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மறித்துள்ளதால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு இதுவரை இல்லாத மிக மோசமான இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 14ஆம் திகதி வெளியிடப்படவுள்ள உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் (World Economic Outlook) ஊடாக, சர்வதேச நாணய நிதியம் பல்வேறு பொருளாதார நிலைமைகள் குறித்த கணிப்புகளை முன்வைக்கவுள்ளது.

போரினால் ஏற்பட்ட தாக்கம் மற்றும் கடுமையான நிதி நிபந்தனைகள் காரணமாக, பொருளாதார வளர்ச்சி வேகம் வீழ்ச்சியடையக்கூடும் என்று நிபுணர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தனர்.

போர் ஏற்படாதிருந்தால், பெருந்தொற்றுக்குப் பின்னர் பொருளாதாரம் மீட்சியடைந்து வந்த நிலையில், 2026 ஆம் ஆண்டில் 3.3% மற்றும் 2027 ஆம் ஆண்டில் 3.2% உலகப் பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்த்ததாக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0