கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் 30 அடி பள்ளத்தில் விழுந்த பார ஊர்தி ..!
இச் சம்பவம் ஏப்ரல் 06 ஆம் திகதி இன்று மாலை 2.45 மணிக்கு ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள செனன் பகுதியில் ஹட்டன் கண்டி பிரதான சாலையில் இடம் பெற்றுள்ளது.
இந்த விபத்தில் சிறிய ரக பார ஊர்தி ஒன்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது , இந்த நிலையில் எவருக்கும் காயங்கள் ஏற்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்து ஹட்டன் போக்குவரத்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.