உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

டெல்லி சட்டமன்ற வளாக கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த கார் – மர்ம நபரால் பரபரப்பு..!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
37 பார்வைகள்

டெல்லி சட்டசபை வளாகத்திற்குள் முகமூடி அணிந்த மர்ம நபர் அத்துமீறி உள்ளே நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலப் பதிவு எண் கொண்ட கார் ஒன்றில் வந்த நபர், இன்று ஏப்ரல் 06 ஆம் திகதி மதியம் 2 மணியளவில் சட்டசபை வளாகத்தின் 2-வது நுழைவு வாயில் உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளார்.


வாயிலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற அந்த நபர் சபாநாயகர் விஜேந்தர் குப்தாவின் அலுவலகத்தை நோக்கி காரை ஓட்டிச் சென்றுள்ளார்.அங்கிருந்த வரவேற்பு பகுதிக்கு அருகே ஒரு பூங்கொத்தை வைத்துவிட்டு, உடனடியாக அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.


சமீபத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, டெல்லி சட்டசபைக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து டெல்லி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காரின் உரிமையாளரைத் தேடி வருகின்றனர்.


இதற்கிடையே டெல்லியில் உள்ள கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு விடுக்கப்பட்ட சம்பவமும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

30 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0